திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கோவில்குளம் சாஸ்தா கோவில் அருகே சந்தேகிக்கப்படும்படி நின்று கொண்டிருந்த இசக்கிமுத்து என்ற ஐயப்பனை (31). சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர், ரமேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து இசக்கி முத்து என்ற ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்