திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம், நெட்டூர், பாடசாலை தெருவை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகன்இசக்கிமுத்து (23). என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் மானூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மேற்படி நபர் மீது மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப, க்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர், உத்தரவின் பேரில், இசக்கிமுத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் (14.10.2024) அன்று பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்