திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாலசுப்பிரமணியபுரம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஏர்வாடி, உப்பு வடக்குத்தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜமால் ஆசிக் (20). என்பவரை சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக 30 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, ஏர்வாடி காவல் ஆய்வாளர், சுதா வழக்கு பதிவு செய்து ஜமால் ஆசிக்கை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்