கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.திலீபன் தலைமையிலான போலீசார் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேல கிருஷ்ணன் புதூர் ஜங்சன் அருகே புத்தளம் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரது மகன் தனபாலன் (22). என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் தனபாலன் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் எதிரான நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் என்னை எச்சரிக்கப்படுகிறது.
















