திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது, சீராங்குளத்துக்கரை அருகே சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை சோதனை செய்ததில் அவர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேலூர், பகுதியை சேர்ந்த மகேஷ் (56). என்பதும், அவரிடம் 298 கிராம் கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர், திருமலை குமார் மகேஷை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்