தூத்துக்குடி : தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆவுடையப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. மகராஜன் மற்றும் போலீசார் (16.02.2026) தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (25). மற்றும் ஜெய் ஆனந்த் (21). ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து மேற்படி 2 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ 155 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
















