தூத்துக்குடி: தருவைக்குளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தருவைக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. விஜயகுமார் தலைமையில் போலீசார் (30.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டினமருதூர் கடற்கரை ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன் (31). என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து மேற்படி குற்றவாளி முருகன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
















