இராமநாதபுரம் : இராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல்நிலைய பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜெயராஜ் என்பவர் மீது உச்சிப்புளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் ஜெயராஜ் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதால், இந்நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.IAS., அவர்கள் ஜெயராஜ் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள். மேலும் இதுபோன்று கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி