தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா,லாட்டரி சீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின் விற்பனையை தடுக்கும் விதமாக தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரசிகாமணி பகுதியில் தலைமைக் காவலர் திரு. சுந்தரய்யா அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு இரண்டு நபர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கொடுத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.விஜயகுமார் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பள்ளிக்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகனான மாடசாமி 21. மற்றும் ஆசீர்வாத நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகனான மனோஜ் குமார் 19.ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50,000 ரூபாய் மதிப்பிலான 1.6 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது..