திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பல் இருப்பதை கண்ட காவல்துறையினர் அங்கு சென்ற போது அனைவரும் சிதறி ஓடினர். அதில் இருவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் கொடுத்துள்ளனர். அவர்களை பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர சோதனை நடத்தினர். அவர்களது பையில் பண்டல், பண்டலாக கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த ஜெரால்டு லூர்துனாதன், அரும்பாக்கத்தை சேர்ந்த வினோத்குமார் என தெரிய வந்தது. மேலும் அவர்களுடன் தொடர்ந்து இருந்த சுமன், அப்பு ஆகிய இருவர் தப்பியோடியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த 8கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆந்திராவில் இருந்த கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்த இருவரை கைது செய்து தப்பியோடிய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு