திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, நடுக்கல்லூர் ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த திருப்பணிகரிசல்குளம், முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (28). என்பவரை சோதனை செய்ததில் அவர் 75 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர், சினேகாந்த் வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்துவை (04.03.2025) அன்று கைது செய்து அவரிடமிருந்து 75 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்