திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர். சிவா தலைமையிலான காவலர்கள் (13.10.2025) அன்று ரோந்து பணியில் இருந்த போது, அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வி.கே.புரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த டானா பகுதியைச் சேர்ந்த அன்வர் அலி (45). ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த அசன் மைதீன் (56). ஆகிய இருவரையும் சோதனை செய்த போது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வி.கே.புரம் காவல் ஆய்வாளர், வனிதா வழக்கு பதிவு செய்து அன்வர் அலி, அசன் மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்