கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது அரசனட்டி சூர்யா நகர் அருகே உள்ள சந்திரன் குடி ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 210 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்