திண்டுக்கல்: பழனியில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க வைக்கும் வகையில் 1 கும்பல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக பழனி உட்கோட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் திரு. தனஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் ஆய்வாளர் திரு மணிமாறன் அறிவுரையின்படி சார்பு ஆய்வாளர் திரு விஜய் தலைமையிலான காவல்துறையினர் சிவப்பிரகாஷ், கார்த்திக், செந்தில்குமார், செல்வ குமரன், சரவணன்,யுவராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது பழனி திண்டுக்கல் ரோடு சிவகிரி பட்டி எதிரே அமைந்துள்ள தண்ணீர் தொட்டி அருகே உள்ள செடி ஓரத்தில் சந்தேகத்து இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை சோதனை மேற்கொண்டதில் காவல்துறை கண்டவுடன் வெவ்வேறு திசையில் தப்பி ஓடிய கும்பலை சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான காவல்துறையினர் விரட்டி மடக்கி பிடித்தனர்.
இதில் கோகுலகண்ணன் (20/25) த/பெ. பாண்டித்துரை பாலசமுத்திரம் ஆறுமுகம் (22/25) த/பெ மணிகண்டன் குபேரப்பட்டினம் கார்த்திக் (23/25) த /பெ சண்முகம்கு பேரப்பட்டினம் முகமத் சேக் த/பெ அப்துல் காதர்தண்டபாணி வீதி குபேரப்பட்டினம் நாகேந்திரபிரசாத் (22/25) த/பெ பாஸ்கரன் தெற்கு அண்ணா நகர் பழனி சரவணகுமார் (19/25) த/பெ செல்வராஜ் ஜவஹர் நகர் பழனி முக சூர்யா (22/25) த/பெ சக்திவேல் சத்யா நகர் பழனிஇதில் இவர்களிடம் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிறு சிறு கஞ்சா பாக்கெட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கீழ்க்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைந்தனர். விரைவில் கஞ்சாவின் புழக்கத்தை முற்றிலுமாக தடுத்து போதையற்ற பழனி நகரமாக மாற்றி காட்டுவோம் என பழனி நகர காவல் துறையினர் உறுதி அளிக்கின்றனர் காவல்துறையினரின் கஞ்சா வேட்டை மேலும் தொடரும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா