மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரியபட்டி அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1) நாகராஜ் (25) .2) விஷ்ணுகுமார் ஆகியோர்களை கைது செய்தார். மேலும் கைது செய்த நபர்களிடமிருந்து இருந்து 6.0 kg கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார்.
















