திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், செய்யது நிசார் அகமது தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பத்தமடை விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த சிவானந்த காலணி தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (20). என்பவரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 84 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்ததால் உதவி ஆய்வாளர், விசாரணை மேற்கொண்டு ரவிச்சந்திரனை கைது செய்து அவரிடமிருந்து 84 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்