கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 1 கிலோ 360 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் 2 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- அதில் சாமிதோப்பு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரது மகன் தனுஷ் கிருஷ்ணா (22). பீச் ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் விஷால் (18). மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் சவுகான் ஆகியோரிடம் இருந்து 1 கிலோ 360 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கைது நடவடிக்கையானது மேலும் தீவிரபடுத்தப்படும் என்றும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
முதல் முறையே மறுப்போம் போதை பாதையை தவிர்ப்போம்.
















