திருநெல்வேலி: திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆண்டோ பிரதீப் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, உபகார மாதபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த திசையன்விளையைச் சேர்ந்த முத்து இசக்கி (19). மற்றும் கண்ணன் (23). ஆகிய இருவரையும் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து திசையன்விளை காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி வழக்கு பதிவு செய்து முத்து இசக்கி, கண்ணன் ஆகிய இருவரையும் (26.05.2025) அன்று கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்