திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவி பகுதியில் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்று பாலம், கிருஷ்ணன் கோவில் அருகே சந்தேகிக்கப்படும்படி நின்று கொண்டு இருந்த பிரம்மதேசம், செக்கடி தெருவை சேர்ந்த கருத்தப்பாண்டியை (24). சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ 700 கிராம் கஞ்சாவை, விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், தர்மராஜ் விசாரணை மேற்கொண்டு கருத்தபாண்டியை (14.11.2024) அன்று கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்