திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கொண்டாநகரம் ரயில்வே கேட் அருகே உதவி ஆய்வாளர், மேகலா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டவுன், ரைஸ் மில் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த தீலிப் (22). கொண்டாநகரம், திருமால் நகரை சேர்ந்த மதிமுருகன் (21). என்பவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 99 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்ததால் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தீலிப், மதிமுருகன் இருவரையும் இன்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 99 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்