திருநெல்வேலி : திருநெல்வேலி ராமையன்பட்டியை சேர்ந்த ராஜேஷ் (28). மற்றும் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (34). இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யும்படி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர், சண்முகவேல் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் மரு.வி.பிரசன்ன குமார், இ.கா.ப., க்கு அறிக்கை அளித்தார். அதையேற்று, அவரது பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ரா.சுகுமார் உத்தரவின் படி, இருவரையும் காவல்துறையினர் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















