திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கஞ்சா வைத்திருந்ததாக, நரசிங்கநல்லூரை சேர்ந்த கருப்பன் மகன் வேல்முருகன்(47). என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதே போல பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி, மகிழ்ச்சி நகரைச் சேர்ந்த ரமேஷ் பாண்டியன் மகன் பிராபாகரன் (35). என்பவர், கிருஷ்ணாபுரம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தாக கைது செய்யப்பட்டிருந்தார். இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சுத்தமல்லி காவல் ஆய்வாளர் சுந்தர மூர்த்தி, சிவந்திபட்டி காவல் ஆய்வாளர் சுதா ஆகியோர் அளித்த வேண்டுகோள்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.அதன் பேரில், ஆட்சியா் இரா.சுகுமார் பிறப்பித்த உத்தரவுப்படி இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (11.10.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்