மதுரை : மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் சிவனம்மாள் (38), ராஜேஷ்(26) ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தடுப்புக்காவல் தொடர்பான ஆணையை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பிறப்பித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் இதற்கான உத்தரவு அளித்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்