திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையில் (26.02.26) அன்று காவல்துறையினர் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் மர்ஜி (28). என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















