கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் 200 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் சிவ பிரசாத் (24). நாகர்கோயில் பகுதியை சேர்ந்த பெல்வின் விஜி என்பவரது மகன் எல்பின் ஜோஸ்வா (28). மற்றும் கணேசன் என்பவரது மகன் மகேஷ் (37). நாகர்கோயில் மதுவிலக்கு ஆய்வாளர் திருமதி. ஜானகி அவர்கள் மேற்படி மூவரையும் கைது செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வருடத்தில் மட்டும் 220 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 407 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 136 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்குடன் தொடர்புடைய 35 இருசக்கர வாகனம் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.