திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் (11.02.2025) – அன்று பேட்டை காவல் உதவி ஆய்வாளர், ஜனகன் தலைமையில் காவல்துறையினர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பாஸ்கர் (35). என்பவரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவருடன் மேலநத்ததை சேர்ந்த சுரேஷ் (37). பேட்டை மைதின் ஆகிய மூவரும் சுமார் ரூ 1,50,000/- மதிப்புடைய 10 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்