திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் (08.01.2026) அன்று மேலப்பாளையம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த நபர்களான மேலப்பாளையத்தை சேர்ந்த பீர் முஹம்மது என்பவர் தப்பி ஓடிவிட மற்ற நபர்களை சோதனை செய்ததில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராசப்பன், முஹம்மது ஹுசைன் மற்றும் முஹம்மது பாதுஷா என்பதும் அவர்களை சோதனை செய்ததில் சுமார் 4.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















