திண்டுக்கல்: திருச்சி சாலை முள்ளிப்பாடி, செட்டியபட்டி பிரிவு அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு தாலுகா போலீசார் வாகன சோதனையின் போது கார்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 440 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்த தனிப்படையினர். இன்று கோடீஸ்வரன், சீனி காஜாமுகமது, சபியுல்லா ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மீதமுள்ள தலைமறைவு குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா