திண்டுக்கல்: பழனி திண்டுக்கல் சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டி.எஸ்.பி தனஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில் காவல் ஆய்வாளர் திரு மணிமாறன் அவர்களின் மேற்பகுதியில் பழனி நகர் சார்பு ஆய்வாளர் திரு விஜய் மற்றும் காவலர்கள் மகேஸ்வரன், செல்வ குமரன், கார்த்திக், மற்றும் மணிகண்டன் ஆகியோர் தகவல் கிடைக்கப் பட்ட இடத்தில் தீவிர ரோந்து பணியில் தேடப்பட்டு வந்த பொழுது அப்பகுதியில் சந்தேகத்து இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபர்களை விசாரணைக்கு அழைத்த பொழுது அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு இருவரும் வெவ்வேறு திசையில் தப்பிக்க முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து சுமார் 100 கிராம் மதிப்பு கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன பிறகு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் ஈரானிய பகுதியை சேர்ந்த ஷாநாவாஷ் (46/25). மற்றும் அவரின் மகன் சாது உசேன் (19/25). என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















