தூத்துக்குடி: (30.08.2025) அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி(28). என்பவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் (29.09.2025) முறப்பநாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.