தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு – இந்த ஆண்டு இதுவரை 81 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த (21.06.2025) அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் மகன் கார்த்திக்ராஜா (24). திருநெல்வேலி ராஜவல்லிபுரம் பகுதியில் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (28). மற்றும் கடந்த (24.06.2025) அன்று தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியை சேர்ந்தவர்களான மாடசாமி மகன் மாரிலிங்கம் (24). பாலா மகன் ராஜ்குமார் (29). தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த வசமுத்து மகன் அருஞ்சுணைமுத்து (எ) அருண் (22). ஆகிய 5 குற்றவாளிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் (24.07.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் மேற்படி 5 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 81 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.