திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட EB காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 1)வைரவன் (31). திண்டுக்கல் அங்காள ஈஸ்வரி கோவில் தெருவை சேர்ந்த 2)முத்துக்கருப்பன் (23). சென்னை முகப்பேரு பகுதியைச் சேர்ந்த 3)சுந்தரபாண்டி (38). கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 4)நவீனா (25). தேனி ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 5)அர்ஜுனன் (48). திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 6)ஷேக் பரீத் (33). தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த 7)திவ்யா (31). வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த 8)ஷேக் முகமது ரஃபிக் (35).ஆந்திரா விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 9)ஜலாபாக லோகேஸ்வரா பிரசாத் (30). ஆகிய 9 நபர்களை தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் மனமயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் தாலுகா சரக காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள், நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கமலதாஸ் அவர்கள் தலைமை காவலர் திரு.சதீஷ்குமார் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.விஜய பாண்டியன் அவர்களின் சீரிய முயற்சியால் (19.05.2025) இன்று மதுரை போதைப் பொருட்கள் மனமயக்கம் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி அவர்கள் மேற்கண்ட குற்றவாளிகள் 1)வைரவன், 2)முத்துக்கருப்பன், 3)சுந்தரபாண்டி, 4)நவீனா, 5)அர்ஜுனன் 6)ஜலாபாக லோகேஸ்வரா பிரசாத் என்பவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,00,000/- அபராதமும் மேலும் 7)சேக் பரீத், 8)திவ்யா, 9)சேக் முகமது ரஃபிக் என்பவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா