கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தக்கலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு தக்கலை, போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காற்றாடி முக்கு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த அருமனை நுள்ளிவிளை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் லிபின் (29). என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு டேவிட் ரவிராஜன் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.