தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கும், பள்ளிகளில் மாணவ/ மாணவிகளுக்கு போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும், பெண்களுக்கான உதவி எண்-181, குழந்தைகளுக்கான உதவி எண்-1098, காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி (04.12.2024) சங்கரலிங்கபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகேசன் தலைமையிலான போலீசார் சங்கலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.