மதுரை: அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் உள்ளது. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து சோழவந்தான் வழியாக இரும்பாடி கருப்பட்டி மார்க்கமாக நிலக்கோட்டை வரை செல்லும் அரசு பஸ் இன்று காலை 11 மணி அளவில் இரும்பாடி கருப்பட்டி ரோட்டில் செல்லும் பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் பஸ்ஸை வழிமறித்து டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ,டிரைவர் சண்முகவேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் அரசு பஸ் டிரைவரை தாக்கி காயம் ஏற்படுத்திய கருப்பட்டி விக்கி என்ற விக்னேஸ்வரன் (22). அம்மச்சியாபுரம் மதனபாபு (21). ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் . தப்பி ஓடிய அம்மசியாபுரம் முனியராஜை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மது கஞ்சா போதையில் அரசு பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனரை தாக்கியதுடன் அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகள் பேசிய வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி