திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், முகம்மது இஸ்மாயில் தலைமையிலான காவலர்கள் கடந்த புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாத்திமா நகா் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற அதே பகுதியைச் சேர்ந்த நூர் முகம்மது மகன் அப்துல்லா(19). என்பவரை சோதனையிட்டதில் அவர் சுமார் 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வந்த நிலையில், மேலப்பாளையம் ஞானியார் அப்பா நகரைச் சேர்ந்த ஜலாலுதீன் மகன் ஷேக் அப்துல் காதர்(22). என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















