தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி காவல் துறையினர் , பன்னிஅள்ளி கிராம பகுதியில், ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில், கஞ்சா பயிரிட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் , அதேபகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது விவசாய நிலத்தில், சோதனை செய்தனர். அப்போது அவர் ஊடு பயிராக கஞ்சா பயிரிட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணனை காவல் துறையினர் , கைது செய்தனர், தொடர்ந்து கஞ்சா செடிகளை அழித்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.