தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு.தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய தோட்டம் புதூர் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் மரவள்ளி செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது இதன் பெயரில் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். கஞ்சா செடி சாகுபடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்தனர். தோட்டத்தின் உரிமையாளரான கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.