கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியான மல்லசந்திரம் கிராமத்தில் உள்ள குற்றவாளியின் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி இருந்தது. கஞ்சா செடி வளர்த்த இரண்டு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ400 கிராம் கஞ்சா செடி பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்