தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் எருமாம்பட்டி கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் பச்சியப்பன் 60. என்பவர் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் குற்றவாளி பச்சியப்பனை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.