திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் போதை பொருட்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் பேரில்மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. பழனி அவர்கள் தலைமையிலான முதல் நிலை காவலர்கள் திரு.பேதுரு, திரு.தங்கதுரை, திரு.பட்டன், திரு.கொம்பையா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது,
வேப்பங்குளம் விலக்கு அருகே திருநெல்வேலி டவுண், வயல் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற மடத்தான் 62. என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தவரை சோதனை செய்தபோது, அவருடைய சட்டையில் 10 கிராம் எடை கொண்ட 5 பாக்கெட்டு கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
பின் உதவி ஆய்வாளர் அவர்கள் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த பாலசுப்பிரமணியன் என்ற மடத்தானை மானூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். மேற்படி மானூர் காவல் ஆய்வாளர் திரு. ராமர் அவர்கள் விசாரணை மேற்கொண்டு, சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த பாலசுப்பிரமணியன் என்ற மடத்தானை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் குற்றவாளியிடமிருந்து 2 கிலோ 50 கிராம் கஞ்சாவையும், சக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.