மதுரை: மதுரை மாவட்டம் (27.11.2025) ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட 17 வாகனங்கள் மதுரை சரக போதைப்பொருள் ஒழிப்புக்குழுவின் தலைவரான மதுரை சரகம் காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்களான காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம் மற்றும் உதவி இயக்குனர், மதுரை தடய அறிவியல் ஆய்வகம், மதுரை மாவட்டம் ஆகியோர்களால் பொது ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை, மதுரை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மதுரை மாவட்டம் அவர்களின் மூலம் பொது ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலத்திற்காக மதுரை மாவட்ட, ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே வாகனங்களை பொது ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்கள், மேற்படி வாகனங்களை நேரில் வந்து பார்வையிட்டு முன் பணமாக இருசக்கர வாகனத்திற்கு ரூ.5000/- மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10,000-ஐ, (19.11.2025) -ம் தேதி முதல் (25.11.2025) -ம் தேதிக்குள் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்வோர் அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலத்தொகை கேட்போர்க்கு வாகனம் ஏலம் விடப்படும்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்















