திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர், பல்லிக்கோட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (31). மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வர புரத்தை சேர்ந்த ரதிஷ் (36) இருவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மானூர் காவல் ஆய்வாளர், அருண்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (03.03.2026) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















