தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் காட்டுப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கீழவைப்பார் சாலையோர காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி மூன்று பேர் மது அருந்தி கொண்டிருந்தனர்,
அங்கு சென்று போலீசார் விசாரிக்க முயன்றபோது போலீசாரை பார்த்தவுடன் 3 தப்பி ஓடி உள்ளனர், பின்பு காரை சோதனை செய்தபோது அதில் 76 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கடல் வழியாக படகு மூலமாக இலங்கைக்கு கடத்த வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்;ந்து கார் மற்றும் 76 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த குளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் தப்பியோடிய மூன்று பேரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் இந்நிலையில் வைப்பார் காட்டுப்பகுதியில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் பதுங்கியிருப்பதாக குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையெடுத்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று வைப்பார் கிராமத்தை சேர்ந்த நாகர்ஜுன்18 கீழ வைப்பார் கிராமத்தை சேர்ந்த கஸ்வின்24, கீழ வைப்பார் கிராமத்தை சேர்ந்த கவின்26 மூன்று பேரையும் சுற்றி வளைத்து கைது செய்து, விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்