திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்தில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர். தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒடிசா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி செல்லும் புரளியா எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல்லை சேர்ந்த ஜோசப்,வேடசந்தூரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 பேர் கஞ்சாவுடன் வந்தனர். இருநபர்களும் காவல்துறையினரை கண்டதும் கஞ்சா வைத்திருந்த பேக்கை செடிக்குள் போட்டுவிட்டு இருவரும் தப்ப முயன்றனர். தப்ப முயன்ற நபர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா