திண்டுக்கல் : 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது திண்டுக்கல் அருகே வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் அழகுபாண்டி, பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவலர்கள் வினோத் கண்ணன் மற்றும் பாலசுப்பிரமணியன், ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், செந்தில், சிவபெருமாள் ஆகியோர் கொண்ட காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு காலாடிபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 31). ருகன் (43). வீரக்கல் குரும்ப பட்டியைச் சேர்ந்த பிரபு (34). ஆகிய மூன்று பேர் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவலர்களை கண்டதும் தப்பி ஓடிய வட்டப்பாறையைச் சேர்ந்த செவ்வந்து (58). ராதா(38). ஆகிய 2 பெண்களை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா