கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அச்சமங்கலம் காந்தி நகர் பகுதியில் கிரானைட் கம்பெனி அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்று குற்றவாளியை சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது, கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.