சென்னை புனித தோமையார் மலை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காரில் கஞ்சா கடத்திவருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புனித தோமையார் மலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திரு.செல்லப்பா மற்றும் போலீசார் புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது காரில் 280 கிலோ குட்கா பொட்டலங்கள் மற்றும் கான்ஸ் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டிவந்த கஞ்சா குன்றத்தூரை சேர்ந்த ராஜேஷ் (40) என்ற நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி, கைது செய்து, 25,000/- ரொக்கம் மற்றும் சொகுசு காரினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்