திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது N.S.நகர் அடுத்த தண்ணீர்பந்தல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த வேடப்பட்டி, குயவர் தெருவை சேர்ந்த செல்வமுருகன்(49). N.பாறைப்பட்டியை விஜயலட்சுமி(36). ஆகிய 2 பேரை கைது செய்து அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி செல்வமுருகன் மனைவி காயத்ரி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா