மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்களின் மேற்பார்வையில், சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தமிழ்செல்வம் அவர்களின் உத்தரவின் பேரில், நேற்று (14.06.2025)ம் தேதி இரவு இளமனூர் அரசு பள்ளி அருகே சிலைமான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.துரைமுருகன் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்து கிரே கலர் இன்னோவா காரை சோதனை செய்த போது, சட்டத்திற்குப் புறம்பாக சுமார் 160 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை கடத்தி வந்த 1) நேசகுமார், (27). த/பெ.அந்தோனி சந்தியாகு, குந்துக்கால், பாம்பன், இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் 2) ஜான்பெனடிக், (28). த/பெ.அந்தோனிசாமி, பெரியவளசு, வீரப்பன்சத்திரம், ஈரோடு மாவட்டம் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 160 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிலைமான் காவல் நிலையத்தில் மேற்படி குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள். இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள். இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவோர் 94981-81206 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்